பிரம்ம சூத்திரம்

₹1,500.00

பிரம்ம சூத்திரம் – ஆன்மீக அறிவியலின் வெளிச்சத்தில் சுய தரிசனத்திற்கு வழிகாட்டும் ஒரு சிந்தனையூட்டும் தமிழ் நூல்.

வெறுமனே ஒரு தத்துவ நூலாக இல்லாமல், நம் அன்றாட அனுபவங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி, நம்மை நாமே அறிந்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய ஆன்மீகச் சாரத்துடன் வாழ வழிகாட்டும் காலத்தால் மதிப்பிட முடியாத பொக்கிஷம்.

Biramma Suthiram– A thought-provoking Tamil book that guides us toward self-realization through the light of spiritual science.

Rather than being merely a philosophical text, it is a timeless treasure that clarifies our everyday experiences and doubts, helps us understand our true selves, and guides us to live a life enriched with spiritual essence alongside worldly and material progress.

Buy Now

Dispatch & Delivery

  • Ships in 1–2 business days
  • Delivery in 3–7 business days
  • Free shipping across Tamil Nadu

Secure online payment

  • Razorpay
  • UPI
  • Credit / Debit Cards
  • Net Banking
Need help choosing? Chat with us on WhatsApp

Book Details

Author

Sampathkumaar

ISBN

978-81-997481-6-3

Publisher

Sampathkumaar Book Publisher

Language

Tamil

Format

Hardcover (Casebound)

Availability

In stock

About the Book

பிரம்ம சூத்திரம் – ஆன்மீக அறிவியலும் வாழ்வியலும்

பிரம்ம சூத்திரம் மனிதனைத் தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்துச் சென்று, தன்னுள் இருக்கும் ஆழமான உண்மையை உணர வழிகாட்டும் ஆன்மீகப் பயணம்.

ஒட்டுமொத்த ஆன்மாக்களின் பேரான்மா பிரம்மம். அனைத்துக் கடவுள் சக்தி நிலைகளின் ஊற்றுக்கண் பிரம்மம். தன் போக்கில், சூழ்நிலைகள் காட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் மனிதனை, தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்து, பிரம்மத்தின் வாசலைத் திறந்து வைக்கின்ற வல்லமை மிகுந்தவையே பிரம்ம சூத்திரங்கள்.

பிரம்ம சூத்திரம் என்றாலே தொட முடியாத தூரத்தில் இருக்கும் ஆன்மீக விஷயம் என்ற எண்ணத்தை உடைத்து, அதன் உயரிய உண்மைகளை உள்ளங்கையில் எடுத்து வைத்தாற்போல் எளிமையாக உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.

தன்னை அறிந்தவன் தன் விதிகளுக்கு எஜமானன் ஆகிறான். அப்படியான எஜமானத் தன்மைக்கும், சுய உணர்வுக்கும், வாழ்வியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கிறது இந்த பிரம்ம சூத்திரம் நூல்.

பிரம்மம் நமக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான்:

“நீயே உனக்கு எஜமானாக இரு; ஏனெனில் நீ பிரம்மம். என்னிலிருந்து வந்தவன் நீ; முதலில் நீ என்னை இனம கண்டுகொள். அதன் பின் என்னைப்போல் பூரணமும் ஆவாய்.”

Every experience carries a lesson, and every lesson brings us closer to understanding life.

Sampathkumaar