பிரம்ம சூத்திரம் – ஆன்மீக அறிவியலும் வாழ்வியலும்
பிரம்ம சூத்திரம் மனிதனைத் தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்துச் சென்று, தன்னுள் இருக்கும் ஆழமான உண்மையை உணர வழிகாட்டும் ஆன்மீகப் பயணம்.
ஒரு மொத்த ஆன்மாக்களின் பேரான்மா பிரம்மம். அனைத்துக் கடவுள் சக்தி நிலைகளின் ஊற்றுக்கண் பிரம்மம். தன் போக்கிலே, சூழ்நிலைகள் காட்டும் திசையிலே பயணித்துக் கொண்டிருக்கும் மனிதனை, தான் யார் என்ற விழிப்புணர்வுக்குள் அழைத்து, பிரம்மத்தின் வாசலைத் திறந்து வைக்கின்ற வல்லமை மிகுந்தவையே பிரம்ம சூத்திரங்கள்.
பிரம்ம சூத்திரம் என்றாலே தொட்ட முடியாத தூரத்தில் இருக்கும் ஆன்மீக விஷயம் என்ற எண்ணத்தை உடைத்து, அதன் உயரிய உண்மைகளை உள்ளங்கையில் எடுத்து வைத்தாற்போல் எளிமையாக உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.
தன்னை அறிந்தவன் தன் விதிகளுக்கு எஜமானன் ஆகிறான். அப்படியான எஜமானத் தன்மைக்கும், சுய உணர்வுக்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கிறது இந்த பிரம்ம சூத்திரம்.
பிரம்மம் நமக்குச் சொல்ல விரும்புவது இதைத்தான்:
“நீயே உனக்கு எஜமானாக இரு; ஏனெனில் நீ பிரம்மம். என்னிலிருந்து வந்தவன் நீ; முதலில் நீ என்னை எனக் கண்டுகொள். உணர்வாய். அதன் பின் என்னைப்போல் பூரணமும் ஆவாய்.”
